அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

Sunday, June 28, 2009

எச்சரிக்கை :

மறைவானவற்றை நம்புவது:

ஹஜ்ரத் அபூஃஹப்ஸா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது, ஹஜ்ரத் உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்ர்கள் தன் மகனிடம் ''மகனே! 'உனக்கு நடந்தே தீர வேண்டிய சோதனைகளை விட்டும் நீ தப்பிக்கவே முடியாது. உனக்கு முடிவு செய்யப் படாத எந்தச் சோதனையும் உனக்கு வரவே முடியாது'' என்று நீ உறுதியாக நம்பாதவரை ஈமானின் உண்மையான ருசியை நீ அடைந்து கொள்ள முடியாது. முதலாவதாக அல்லாஹுதஆலா படைத்தது எழுதுகோலைத்தான். பின்பு எழுதும்படி எழுதுகோலுக்குக் கட்டளையிட்டான். ரட்சகனே! நான் எதை எழுதுவேன்? என்று எழுது கோல் கேட்டது. எந்தெந்தப் பொருளுக்கு இறுதி நாள்வரை எது எது விதியாக்கப்பட்டதோ, அவை அனைத்தையும் எழுது! என்று அல்லாஹுதஆலா கூறியதை நபியவர்கள் மூலம் நான் கேட்டுள்ளேன்.
''மகனே! எவன் இந்த நம்பிக்கையல்லாது வேறு நம்பிக்கையின் மீது மரணிப்பானோ என்னுடன் அவனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: அபூதாவுத்)

''சோதனை எந்த அளவு கடினாமாக இருக்குமோ, அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும். ஒரு சமூகத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்கும்பொழுது அவர்களைச் சோதனைகளில் ஆக்குகிறான். அச்சோதனையைப் பொருந்திக் கொள்பவரை அல்லாஹுதஆலாவும் பொருந்திக்கொள்கிறான். பொருந்திக்கொள்ளாதவரை அல்லாஹுதஆலாவும் பொருந்திக்கொள்வதில்லை. என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்காள் அறிவிக்கிற்றார்கள். (நூல்: திர்மிதீ)

அதிசய மரம்


அதிசய தென்னை மரம் ஐந்து கலையை கொண்டது :
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் .

Tuesday, June 23, 2009

அல்லாஹ்வின் அன்பைப்பெற ....

அழகும் அழகானதும் .
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் " என்று கூறினார்கள் .
அப்பொழுது ஒரு மனிதர் "தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார் (இதுவும் தற்பெருமையில் சேருமா ?) என்று கேட்டார் . அதற்கு
நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே அவன் விரும்புவான் ;
தற்பெருமை என்பது(ஆணவத்தோடு சத்தியத்தை ஏற்க்க மறுப்பதும் ,மக்களை கேவலமாக மதிப்பதும்தான் .)என்று கூறினார்கள் .
மார்க்கத்தை கஷ்டப்படுத்தாமல் இருப்பது ...
அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிற இலகுவனே மார்க்கம்
இஸ்லாமிய மார்க்கமே , அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : புகாரி :30வது பாடம் .

Monday, June 22, 2009

உனை மறவா இதயம் வேண்டும்

இறைவா ஒரு நொடியும் உனை
மறவா இதயம் வேண்டும்
ஒருபோதும் உன் கட்டளையை
மீறாத வாழ்வு வேண்டும் .

உலகை விரும்பாத மனம் வேண்டும்
மறுமையை குறிக்கோளாய் வாழ வேண்டும்
கோபமும் காமமும் அகல வேண்டும்
அனைவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்

இருப்பதில் இன்பமாக வாழ வேண்டும்
பொறுமை அமைதி சாந்தி
சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்
பாதுகாப்பை நீ தர வேண்டும்
குறைகளை எடுத்துச் சொல்லும் -நல்ல
நண்பன் அருகில் வேண்டும்

உனக்கு அடிபணிவதில் எனக்கு
பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்
முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்
முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்
பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே
இனி வேண்டும்
அனைவருக்கும் உதாரணமாய்
என் வாழ்வு அமைய வேண்டும்
இறக்கும்போது கலிமாவை நான்
மொழிய வேண்டும் -மறுமையில்
இனிய பரிசாக இன்பம் நிறைந்த சொர்கத்தை
நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .

நன்றி :