அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

Sunday, June 28, 2009

எச்சரிக்கை :

மறைவானவற்றை நம்புவது:

ஹஜ்ரத் அபூஃஹப்ஸா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது, ஹஜ்ரத் உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்ர்கள் தன் மகனிடம் ''மகனே! 'உனக்கு நடந்தே தீர வேண்டிய சோதனைகளை விட்டும் நீ தப்பிக்கவே முடியாது. உனக்கு முடிவு செய்யப் படாத எந்தச் சோதனையும் உனக்கு வரவே முடியாது'' என்று நீ உறுதியாக நம்பாதவரை ஈமானின் உண்மையான ருசியை நீ அடைந்து கொள்ள முடியாது. முதலாவதாக அல்லாஹுதஆலா படைத்தது எழுதுகோலைத்தான். பின்பு எழுதும்படி எழுதுகோலுக்குக் கட்டளையிட்டான். ரட்சகனே! நான் எதை எழுதுவேன்? என்று எழுது கோல் கேட்டது. எந்தெந்தப் பொருளுக்கு இறுதி நாள்வரை எது எது விதியாக்கப்பட்டதோ, அவை அனைத்தையும் எழுது! என்று அல்லாஹுதஆலா கூறியதை நபியவர்கள் மூலம் நான் கேட்டுள்ளேன்.
''மகனே! எவன் இந்த நம்பிக்கையல்லாது வேறு நம்பிக்கையின் மீது மரணிப்பானோ என்னுடன் அவனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று ஹஜ்ரத் உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: அபூதாவுத்)

''சோதனை எந்த அளவு கடினாமாக இருக்குமோ, அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும். ஒரு சமூகத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்கும்பொழுது அவர்களைச் சோதனைகளில் ஆக்குகிறான். அச்சோதனையைப் பொருந்திக் கொள்பவரை அல்லாஹுதஆலாவும் பொருந்திக்கொள்கிறான். பொருந்திக்கொள்ளாதவரை அல்லாஹுதஆலாவும் பொருந்திக்கொள்வதில்லை. என்பதாக நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்காள் அறிவிக்கிற்றார்கள். (நூல்: திர்மிதீ)

0 Comments: